மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநொச்சிக்குளம் குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெரிய நொச்சிக்குளம் குளத்தில் நேற்று (17) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வள்ளம் ஒன்றில் குறிதத நபர் மீன் பிடிக்க சென்றுள்ளார். இதன் போது குளத்தின் நடுப்பகுதில் வள்ளம் நீருக்குள் மூழ்கியதனால் மரணமடைந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் பெரியநொச்சிக்குளம் பகுதியினை சேர்ந்த பா.தியாகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.