பயணிகள் விமானம் நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்ததா - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

பயணிகள் விமானம் நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்ததா - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானமொன்று வானில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி கடந்த 6ஆம் திகதி பயணித்த யுஎல் 504 என்ற விமானம் குவைத்தில் தரையிறங்கியதாக குறித்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விமானத்தில் போதியளவு எரிபொருள் இருந்ததாகவும் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக திருவானந்தபுரம் விமான நிலையத்தின் தொழில்நுட்ப தரிப்பிடத்தில் தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.