களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - இன்று விசேட பொதுச் சபை!

களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - இன்று விசேட பொதுச் சபை!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட  பொதுச் சபை கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

இதன்படி, இன்று காலை 11 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

"இது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நீதிபதிக்கோ தொடர்பான பிரச்சனை அல்ல. இது நீதிமன்றத்தின் சுதந்திரம், அரசியலமைப்பின் கோட்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது தொடர்பான மிகவும் முக்கியமான தேசிய விடயமாகும். இவ்வாறான அடிப்படை அரசியலமைப்பு மாற்றங்கள், பரந்த அளவிலான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கலந்துரையாடல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இந்த முக்கியமான தேசிய விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்த  பொதுச்  சபை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கௌரவத்துடன் அழைக்கின்றேன்."