மட்டக்களப்பில் ஆலயத்தில் வாள்வெட்டுத்தாக்குதல் : பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள்; உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கப்பட்டது
அன்னதான சாப்பட்டால் ஏற்பட்ட தகராறு
அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து 7 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவரை மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
ஒருவர் மடக்கிப்பிடிப்பு
இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை காவல்துறையிடம் ஒப்படைத்ததுடன். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.