2,200 மீட்டர் உயரத்தில் எதிரொலித்த பாரம்பரிய இசை - படு வைரலாகும் அல்போர்ன் திருவிழா வீடியோ

2,200 மீட்டர் உயரத்தில் எதிரொலித்த பாரம்பரிய இசை - படு வைரலாகும் அல்போர்ன் திருவிழா வீடியோ

வெண்பனி போர்த்திய குளிர்ச்சியான ஸ்விஸ் மலைத்தொடர்களுக்கு நடுவே, இயற்கையின் அமைதியை இசையால் நிரப்பிய அல்போர்ன் திருவிழாவின் காணொளிகள் இணையத்தில் வைராலாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாரம்பரிய அல்போர்ன் திருவிழா

நீண்ட குழல் வடிவிலான பாரம்பரிய அல்போர்ன் கருவிகளை நூற்றுக்கணக்கான இசைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாசித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

2,200 மீட்டர் உயரத்தில் எதிரொலித்த பாரம்பரிய இசை - படு வைரலாகும் அல்போர்ன் திருவிழா வீடியோ | 2000 Meters Above Sea Level Alphorn Festival Video

சுவிட்சர்லாந்தின் நென்தாஸ் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சிறப்பு இசை விழா, அந்நாட்டின் பழமையான கலாசார மரபுகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அல்போர்ன் இசைப்பாளர்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களும் இந்த விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

2,200 மீட்டர் உயரத்தில் எதிரொலித்த பாரம்பரிய இசை - படு வைரலாகும் அல்போர்ன் திருவிழா வீடியோ | 2000 Meters Above Sea Level Alphorn Festival Video

 

திருவிழாவிற்கு முன்பாக இசைப்பாளர்கள் தங்கள் அல்போர்ன் கருவிகளை முறையாகத் தயார் செய்து, இசையின் ஒத்திசைவைப் பரிசோதித்தனர். பின்னர் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசுமையான மலைப்புல்வெளியில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் அல்போர்ன் இசையை எழுப்பினர்.

மலைகளில் எதிரொலித்த அந்த இசை, பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு மலைச்சமவெளியில் இருந்து மற்றொரு சமவெளிக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தொலைதொடர்பு கருவியாக அல்போர்ன் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தப் பழமையான பாரம்பரியத்தின் நினைவாகவும், சுவிஸ் கலாசாரத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இன்றும் அல்போர்ன் இசைப்பாளர்கள் ஒன்றுகூடி இசை நிகழ்த்துகின்றனர். இயற்கை, இசை மற்றும் பாரம்பரியம் ஒன்றிணையும் இந்த அல்போர்ன் திருவிழா, சுவிட்சர்லாந்தின் கலாசாரத்தை  உலகிற்கு எடுத்துரைக்கும் ஓர் அழகிய நிகழ்வாக இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.