நாட்டில் நேற்று 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி
இலங்கையில் நேற்று 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 1,223 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவானதுடன், 47 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 269,946 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 239,584 பேர் குணமடைந்துள்ளனர்.
27,011 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.