பசறையில் இன்றைய தினம் 30 பேருக்கு கொவிட் தொற்றுறுதி

பசறையில் இன்றைய தினம் 30 பேருக்கு கொவிட் தொற்றுறுதி

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றன.

இவற்றுள் 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பிளானிவத்தைப் பகுதியில் இரண்டு தொடர் குடியிருப்பு பகுதிகளில் மேற்பட்ட பரிசோதனைகளில் 11 பேருக்கும் தொற்றுறுதியானது.

இதனையடுத்து குறித்த இரண்டு தொடர் குடியிருப்புக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.