சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை - கல்வியமைச்சர்
நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாமையாலும்,அழகியல் செயன்முறை பரீட்சை நடாத்தப்படாமையாலும் மாணவர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.