முச்சக்கர வண்டியில் 6.5 கிலோ கேரள கஞ்சா கடத்தியவர் கைது

முச்சக்கர வண்டியில் 6.5 கிலோ கேரள கஞ்சா கடத்தியவர் கைது

ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் ஒருதொகை கேரள கஞ்சா கடத்திச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(08) பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி என்பனவும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.