சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 672 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் மீட்பு
சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று(08) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இந்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் இந்த சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொதிகள் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.