களுவாஞ்சிகுடி உந்துருளி விபத்தில் மூவர் படுகாயம்

களுவாஞ்சிகுடி உந்துருளி விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று(08) நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுதாவளையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பணித்த உந்துருளி ஒன்றும், கல்லாறு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உந்துருளியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.