திடீரென கீழே விழுந்து உயிரிழந்த நபர்!

திடீரென கீழே விழுந்து உயிரிழந்த நபர்!

விகாரை ஒன்றினுள் துப்பரவு பணிக்காக இன்று (07) காலை சென்ற நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அம்பலங்கொடை ஹிரேவத்த பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், 54 வயதுடைய நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹிக்கடுவை மலவென்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சடலம் பிசிஆர் பரிசோதனைக்காக பலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.