கேகாலை தோட்டம் ஒன்றில் கொவிட் கொத்தணி!

கேகாலை தோட்டம் ஒன்றில் கொவிட் கொத்தணி!

கேகாலை, அட்டுகொடை கோலிந்தா தோட்டத்தின் 03 ஆம் பிரிவை சேர்ந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ள நிலையில், பின்னர் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 56 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 8 பேரில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

தொற்றாளர்கள் அனைவரும் ரம்புக்கணை இடைநிலை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தை சேர்ந்த எவருக்கும் தோட்டத்தில் இருந்து வௌியேறவும் தோட்டத்திற்கு எவரும் வருவதற்கும் சுகாதார பிரிவினர் தடை விதித்துள்ளனர்.