ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி!
அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 12 ஆம் திகதிமுதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளைச் சேர்ந்த அனைத்து கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு இவ்வாறு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்தார்.