துப்பாக்கி சூட்டில் 52 வயதான நபர் ஒருவர் பலி!

துப்பாக்கி சூட்டில் 52 வயதான நபர் ஒருவர் பலி!

கதிர்காமம் - நாகவீதி - சமுர்தி வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) இரவு 7.30 மணியளவில் தனிப்பட்ட காரணத்திற்காக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த குறித்த நபர் தெபருவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன், கதிர்காமம் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.