மீன்பிடிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்பு!

மீன்பிடிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை - வீரக்கெட்டிய - போகமுவ வாவியிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய இன்று காலை குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த இருவரும் நேற்று (05) மாலை மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தபோது மின்னல் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.