எரிபொருட்களுக்கு தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சர் விளக்கம்

எரிபொருட்களுக்கு தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சர் விளக்கம்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதிர்வரும் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் காணப்படுவதாகவும், 13 நாட்களில் 35,000 மெட்ரிக் டன் எரிபொருள் கொண்ட கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.