முரண்பாடான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

முரண்பாடான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

மாத்தறை மாவட்டத்தின்  உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்கவிடம் எமது செய்திப் பிரிவு விசாரித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

எனினும், மாத்தறை மாவட்ட வைத்திய அதிகாரியிடம் இது தொடர்பில் வினவிய போது, தொடர்பாடலில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக இந்த தவறு இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

எவ்வாறிருப்பினும் இனி இவ்வாறான தவறுகள் நிகழாமல் இருப்பதற்கும், தவறை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற அமைச்சர் வீரசுமன வீரசேகர தெரிவித்தார்.