அஸ்ட்ராசெனெகா இரண்டாம் செலுத்துகைக்காக காத்திருப்போருக்கான ஒரு அறிவித்தல்!
இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாம் செலுத்துகையாக பெற்றுக் கொண்டவர்களுக்குச் செலுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில், 55 வயதுக்கு மேற்பட்ட, அஸ்ட்ராசெனெகாவை முதல் செலுத்துகையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு, நாளை முதல் செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் என்பன தகுதிபெற்றவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.