இந்த மாதத்திற்குள் 2 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

இந்த மாதத்திற்குள் 2 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

இந்த மாதத்திற்குள் 2 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இன்று (05) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், கட்டம் கட்டமாக எஞ்சிய தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் 26 ஆயிரம் தடுப்பூசிகளும், 3 ஆம் வாரம் 60 ஆயிரம் தடுப்பூசிகளும், நான்காம் வாரம் 90 ஆயிரம் தடுப்பூசிகளும் கிடைக்க உள்ளன.

விசேட குளிர்நிலை களஞ்சியத்தில், அதாவது மறை 70 முதல் 90 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் பைசர் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

எனவே, நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்தமாற்று சேவை நிறுவகத்தில் பைசர் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஏனைய தடுப்பூசிகள், சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் மத்திய ஒளடத களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்படும்.

எனினும், பைசர் தடுப்பூசியைக் களஞ்சியப்படுத்துவதற்கான அதிகூடிய குளிர்நிலை வசதி இலங்கையில், தேசிய இரத்தமாற்று சேவை நிறுவகத்தில் மாத்திரமே உள்ளது.

இதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் அங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.