திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலை - கிண்ணியா - ஆலங்கேணி பகுதியில், நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

நேற்று (04) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

4 பேர் மீன் பிடியில் ஈடுபடச் சென்றபோது, குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவத்தில், உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.