பிரதமர் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் ஆகியோர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வரலாற்று சிறப்புமிக்க அத்கந்த ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஆணமடுவே ஸ்ரீ ரதனபால தம்மதஸ்ஸி தேரரை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதன்போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் கலாநிதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரையும் சந்தித்து பிரதமர் அவர்களது நலன் விசாரித்தார்.
அஸ்கிரி மஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அஸ்கிரி மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதன்போது அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த தேரர் மற்றும் அஸ்கிரி மஹா விகாரையின் அறங்காவல் சபை உறுப்பினரும், பதுளை முதியங்கன ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முருத்தெனியே தம்மரதன தேரர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதனை தொடரந்து அஸ்கிரி கெடிகே ரஜ மஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், விகாராதிபதி ஸ்ரீலங்கா ராமஞ்ஞா மஹா நிகாயவின் சிரேஷ்ட உறுப்பினர் வணக்கத்திற்குரிய கெப்பிடியாகொட சிறிவிமல தேரரிடமும் ஆசீர்வாதம் பெற்றார்.
இதன்போது மகாவலி கங்கையுடன் இணைக்கப்படும் கெடம்பே போதியின் பக்க சுவரை புனரமைப்பது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தினார்.
மகாவலி அமைச்சின் கீழ் குறித்த நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் அச்சந்தரப்பத்திலேயே கௌரவ பிரதமரினால் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இராணுவத்தின் உதவியுடன் அப்பக்க சுவரை நிர்மாணிக்குமாறு பிரதமர் அறிவித்தார்.
அஸ்கிரி மஹா விகாரையின் மஹா பிரிவெனாவிற்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர், கண்டி அஸ்கிரி மஹா பிரிவெனாவின் பிரிவெனாதிபதி, அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் ஷாஸ்த்ரபதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.