நேற்று கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தொடர்பான விபரம்!

நேற்று கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தொடர்பான விபரம்!

நாட்டில் நேற்றைய தினம் 63 ஆயிரத்து 704 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் 29 இலட்சத்து 51 ஆயிரத்து 245 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 12 இலட்சத்து 35 ஆயிரத்து 288 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

19 இலட்சத்து 11 ஆயிரத்து 208 பேருக்கு, சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 8 இலட்சத்து 36 ஆயிரத்து 814 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியும், 3 இலட்சத்து 84 ஆயிரத்து 47 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 14 ஆயிரத்து 427 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.