ஹரக்கட்டாவின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் கண்டுபிடிப்பு
துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக்கட்டாவின் போதைப்பொருள் தொகை இலங்கைக்கு மீன்பிடி படகுகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த தினங்களில் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த நபர் நேற்றைய தினம் (03) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோட்டேகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையூடாக பெற்றுக் கொண்ட 52 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.