சிறைச்சாலை உத்தியோகத்தர் உட்பட 4 பேர் போதைப்பொருளுடன் கைது!
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சொய்ஸாவத்த பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் உட்பட நால்வரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடையே இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்களில் ஒருவர் சந்தேகநபர் ஒருவரின் மனைவி என்றும் மற்றைய பெண், அச்சந்தேகநபரின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.
மற்றைய சந்தேகநபரான சிறைச்சாலை உத்தியோகத்தர், குறித்த சந்தேகநபர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்க வந்தவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.