துப்பாக்கியை காட்டி நகரசபை ஊழியர்களை அச்சுறுத்திய போலி வைத்தியர் உட்பட ஐவர் கைது!

துப்பாக்கியை காட்டி நகரசபை ஊழியர்களை அச்சுறுத்திய போலி வைத்தியர் உட்பட ஐவர் கைது!

குருணாகல் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியர் என்ற போர்வையில் ஔடதங்களை விற்பனை செய்த நபரொருவர் உட்பட ஐவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் நகரசபை ஊழியர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் குருணாகல் காவல்நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து ரிபிட்டர் ரக துப்பாக்கியொன்றும், வாயு ரைபிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை, 2 ஜீப்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரான ஆயுர்வேத வைத்தியர் எனக்கூறப்படும் நபரினால் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் எந்தவொரு வர்த்தக நாமமோ, சுற்றுத்தாளோ காணப்பட்டிருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானத்தில் மருந்த பொருட்களை விற்பனை செய்யவேண்டாம் என சந்தேகநபரை அறிவுறுத்தியபோது, மற்றைய சந்தேகநபர்கள், தம்மிடம் துப்பாக்கியை காண்பித்து சந்தேகநபர்கள் அச்சுறுத்தியதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டிய, மத்துகம, எம்பிலிப்பிட்டிய, பேலியகொட மற்றும் தலவத்துகொட் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடமாட்டக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் இவர்கள் குருணாகல் நகருக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.