கொழும்புக்குள் பிரவேசிக்க முயன்ற பேருந்தின் சாரதி - நடத்துநர் கைது!

கொழும்புக்குள் பிரவேசிக்க முயன்ற பேருந்தின் சாரதி - நடத்துநர் கைது!

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மதவாச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்து அவர்கள் கொழும்புக்கு செல்ல முற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.