வடக்கில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!
யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
இவை திங்கட்கிழமை முதல் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், யாழ்ப்பாணம் நகரில் உள்ள இரண்டு நகைக்கடைகள் சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கடைகளில் பணியாற்றுகின்ற சிலர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றது.
இதேவேளை, வவுனியா நகரில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் சதொச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.