கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையும் இந்தியாவும் கைகோர்த்து செயற்பட வேண்டும்!

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையும் இந்தியாவும் கைகோர்த்து செயற்பட வேண்டும்!

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையும், இந்தியாவும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவசர உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடனடியாக உதவுகின்ற இந்தியா, கப்பல் விபத்தின் போதும், விரைந்து உதவிகளை வழங்கியிருந்தது.

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு பேருதவியாக அமைந்திருந்தது.

எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை, இந்திய அரசாங்கத்திடம் தாம் கோரியிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.