ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது
ஐஸ் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த இளைஞன் ஒருவரை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் லூசா பிரிவை சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே 120 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 400 மில்லிகிராம கேரள கஞ்சவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரினால் குறித்த இளைஞனின் வீட்டை இன்று (02) மதியம் சோதனைக்கு உட்படுத்திய போதே மேற்படி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.