கதிர்காமம் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் எசல மஹா பெரஹெர இடம்பெற உள்ளதால் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்பட உள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முறை வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.