கூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி
கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சில நாட்களில் பத்து லட்சத்துக்கும் அதிக டவுன்லோட்களை கடந்த இந்திய செயலி விவரங்களை பார்ப்போம். கூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி ரிமூவ் சைனா ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்போன்களில் உள்ள சீன செயலிகளை கண்டறிந்து அன்-இன்ஸ்டால் செய்யும் ரிமூவ் சைனா ஆப்ஸ் (Remove China Apps) எனும் செயலி இந்தியாவில் பிரபலமாகி உள்ளது. தற்சமயம் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச செயலிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மே 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ரிமூவ் சைனா ஆப்ஸ் எனும் செயலி இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியது மற்றும் இந்தியா-
சீன எல்லை விவகாரங்களில் சீனா மீது அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து சீன பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோப்புப்படம் செயலியின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த செயலி சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயலிகளை கண்டறிந்து விடுகிறது. பின் பயனர் விரும்பும் பட்சத்தில் தேவையற்ற செயலிகளை ரிமூவ் சைனா ஆப்ஸ் செயலியில் இருந்தபடியே அவற்றை அன்-இன்ஸ்டால் செய்ய முடியும்.
தற்சமயம் இந்த செயலிக்கு பயனர்கள் 4.8 நட்சத்திர குறியீடுகளை வழங்கியுள்ளனர். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை மட்டுமே கண்டறிகிறது. அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை இந்த செயலி கண்டறிவதில்லை. ரிமூவ் சைனா ஆப்ஸ் செயலியை ஜெய்ப்பூரை சேர்ந்த ஒன்டச் ஆப்லேப்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான வலைதளம் மே 8 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை பலருக்கு ஏற்பட்டு இருப்பதன் காரணமாகவே இதனை பலர் டவுன்லோட் செய்து வருகின்றனர்.