கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .