மாவட்ட ரீதியில் நேற்று பதிவான தொற்றாளர் விபரம்

மாவட்ட ரீதியில் நேற்று பதிவான தொற்றாளர் விபரம்

நாட்டில் நேற்று(29) பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களில், 300க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி இருந்தனர்.

கொழும்பில் நேற்று 348 பேர் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டதுடன், அங்கு மொத்தமாக இதுவரையில் 62,238 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கம்பஹாவில் நேற்று 280 பேருக்கு தொற்று உறுதியானது. களுத்துறையில் 198 பேருக்கும், கண்டியில் 73 பேருக்கும், குருணாகலையில் 70 பேருக்கும், காலியில் 113 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கேகாலையில் 69 பேருக்கும், புத்தளத்தில் 86 பேருக்கும், அனுராதபுரத்தில் 12 பேருக்கும், மாத்தறையில் 9 பேருக்கும் கொவிட் 19 தொற்று உறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பொலன்னறுவையில் 8 பேருக்கும், அம்பாறையில் 89 பேருக்கும், நுவரெலியாவில் 15 பேருக்கும், இரத்தினபுரியில் 93 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 3 பேருக்கும், பதுளையில் 66 பேருக்கும், மட்டக்களப்பில் 84 பேருக்கும், மொனராகலையில் 39 பேருக்கும் தொற்று உறுதியானது.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் தலா 7 பேருக்கும், மாத்தளையில் 18 பேருக்கும், வவுனியாவில் 11 பேருக்கும், மன்னாரில் 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து வந்த 8 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி நேற்று 1,717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், நாட்டில் இதுவரையில் 257,224 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Image