கிழக்கில் நேற்று 8,794 பேருக்கு கொவிட் தடுப்பூசி

கிழக்கில் நேற்று 8,794 பேருக்கு கொவிட் தடுப்பூசி

கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 8,794  கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,854 தடுப்பூசிகளும், திருகோணமலை மாவட்டத்தில் 4,734 தடுப்பூசிகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,206 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 16,675 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 12,227 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 12,569 பேருக்கும் இதுவரை கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.