வேகமாக பரவும் அல்பா வைரஸ் திரிபு நாட்டின் 9 இடங்களில் அடையாளம்!

வேகமாக பரவும் அல்பா வைரஸ் திரிபு நாட்டின் 9 இடங்களில் அடையாளம்!

கென்யா மற்றும் அமெரிக்காவில் வேகமாக பரவும் பிரித்தானிய கொவிட் திரிபான அல்பா வைரஸ் நாட்டில் 9 இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, மாத்தறை, ஹபரதுடுவ, கராப்பிட்டி மற்றும் ராகம போன்ற பிரதேசங்களில் குறித்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.