பட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

பட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

நாய்ஸ் பிராண்டின் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்செட்டில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.


நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ மாடலில் IPX4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய சார்ஜிங் கேஸ் உடன் வரும் இயர்பட்ஸ் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது. இதன் ஸ்டான்ட்-அலோன் பிளேபேக் 4 மணி நேரங்களும், சார்ஜிங் கேசுடன் 32 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

 

 

 

நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ சிறப்பம்சங்கள்

 

- ப்ளூடூத் 5.0

- 6 எம்எம் டிரைவர்கள்
- ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
- 800 எம்ஏஹெச் பேட்டரி

நாய்ஸ் ஷாட்ஸ் நுவோ இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.