இந்தியாவில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி

இந்தியாவில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 120,000 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த 58 நாட்களில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கையை விட குறைவாகுமென இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 2கோடியே 60 இலட்சமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,380 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 344,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 12 நாட்களில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.