பிஎஸ் கேம்களை மொபைலில் வெளியிட சோனி திட்டம்

பிஎஸ் கேம்களை மொபைலில் வெளியிட சோனி திட்டம்

சோனி நிறுவனம் பிஎஸ் சாதனங்களில் பிரபலமாக இருந்த கேம்களை மொபைலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது.

சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனை சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவு தலைமை செயல் அதிகாரி ஜிம் ரியான் உறுதிப்படுத்தி இருக்கிறார். சோனியின் ஐகானிக்ஐபி மார்ச் 2022 வாக்கில் மொபைல் தளங்களில் வெளியாக இருக்கிறது.

கன்சோல் அல்லாத மொபைல் மற்றும் இதர சாதனங்களுக்கு முன்னணி கேம் பிரான்சைஸ்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என ரியான் தெரிவித்தார். 2020 ஆண்டு உலகம் முழுக்க மொபைல் கேமிங்கில் 121 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியதை ரியான் சுட்டிக்காட்டினார்.  

பிளேஸ்டேஷன் சார்பில் முன்னணி கேம்களை மொபைல் சாதனங்களில் இயங்க வைக்க தனி வியாபார பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பணியாற்ற டெவலப்பர்களை பணியமர்த்தி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எனும் காலக்கட்டத்தில் மொபைல் கேம்களை வெளியிட சோனி திட்டமிட்டுள்ளது.