தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்: நீதிமன்றின் உத்தரவு

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்: நீதிமன்றின் உத்தரவு

அம்பாறையில் கலாவதியான மருந்துப் பொருட்களைப் பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவைக் கல்முனை நீதவான் நீதிமன்று இன்று (13-03-2026) பிறப்பித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் இயங்கிவருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்டப் பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த வைத்தியசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களைக் கைப்பற்றியதுடன் குறித்த வைத்தியசாலைக்கு எதிராகக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த வழக்கானது நேற்று (12-03-2026) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்: நீதிமன்றின் உத்தரவு | Kalmunai Private Hospital Fined Expired Drugs

இதன்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்.எம். ஸாஜீத், குறித்த வழக்கு சம்பந்தமாக மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.