கொரோனா பரவல் எதிரொலி - கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் எதிரொலி - கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் நடைபெறவிருந்த ராஜ்யசபா இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கேரள காங்கிரஸ் (மணி) தலைவர் ஜோஸ் கே.மணி, பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவியை கடந்த ஜனவரி 11-ம் தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் ஜூலை 2024 வரை உள்ளது. எனவே இந்தப் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சட்டவிதிகளின்படி காலியாக உள்ள இடங்களுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் கொரோனா இரண்டாவது அலை கேரளாவிலும் உச்சநிலையில் இருப்பதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், கொரோனா சூழலில் மேம்பாடு அடையும் முன்பு தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளது. இருந்தாலும், எந்த தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.