யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் 1500000 பேர் வெளியேற்றம்

யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் 1500000 பேர் வெளியேற்றம்

யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தல் 1500,000 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேவேளை  சூறாவளியின் தாக்கத்தால் 300,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 134 கட்டுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளியானது விவசாய நிலங்கள் , மீன்வளம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. இதனால் சுமார் 20,000 மண் வீடுகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் சேதமடைந்தாக தெரிவித்தார்.

இதனையடுத்து கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் இரவு 7.45 மணி வரை மூடப்பட்டுள்ளது. மேலும் புவனேஸ்வரின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளது.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் விமான நிலையம் வியாழக்கிழமை இரவு 7.45 மணி வரை மூடப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் துர்காபூர் மற்றும் ரூர்கேலா விமான நிலையங்கள் இன்று மூடப்படும். இந்திய ரயில்வே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நீண்ட தூர புகையிரதங்கள் மாத்திரம் சனிக்கிழமை வரை கொல்கத்தா மற்றும் தென் மாநிலங்களுக்கு பயணிக்கும் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை நிலச்சரிவுகள் தற்போது குறைந்துள்ள நிலையில் மழை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.