
3 நாளில் மாநிலங்களுக்கு 48 லட்சம் டோஸ் தடுப்பூசி - மத்திய அரசு தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும், நேரடி மாநில கொள்முதல் மூலமாகவும் மொத்தம் 21 கோடியே 80 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.
இன்னும் 3 நாட்களில் மாநிலங்களுக்கு 48 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும், நேரடி மாநில கொள்முதல் மூலமாகவும் மொத்தம் 21 கோடியே 80 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இவற்றில், வீணாக்கியது உள்பட 20 கோடியே 8 ஆயிரத்து 875 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்களுக்கு போடப்பட்டது, 19 கோடியே 60 லட்சத்து 51 ஆயிரத்து 962 டோஸ் தடுப்பூசிகள் ஆகும். மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்பட 10 மாநிலங்களில் மட்டும் இதில் 66.3 சதவீத டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 15 டோஸ் தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. இன்னும் 3 நாட்களில் மாநிலங்களுக்கு 48 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்.
97 லட்சத்து 60 ஆயிரத்து 444 சுகாதார பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 67 லட்சத்து 6 ஆயிரத்து 890 சுகாதார பணியாளர்கள் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
முன்கள பணியாளர்களில் 1 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 357 பேர் முதல் தவணையும், 83 லட்சத்து 33 ஆயிரத்து 774 பேர் 2-வது தவணையும் போட்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 66 லட்சத்து 45 ஆயிரத்து 457 பே்ா முதல் தவணையும், 1 கோடியே 82 லட்சத்து 62 ஆயிரத்து 665 பேர் 2-வது தவணையும் போட்டுள்ளனர்.
45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 6 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 756 பேர் முதல் தவணையும், 98 லட்சத்து 18 ஆயிரத்து 384 பேர் 2-வது தவணையும் போட்டுள்ளனர். 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்து 235 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.