பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்... இரங்கல் தெரிவித்துவரும் பிரபலங்கள்

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்... இரங்கல் தெரிவித்துவரும் பிரபலங்கள்

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் விஜய் பாட்டீல் (78) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

விஜய் பாட்டீல் (லக்‌ஷ்மண்) - சுரேந்திரா (ராம்) ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பத்தில் சில படங்களுக்கு ராம் - லக்‌ஷ்மண் என்கிற பெயரில் ஒன்றாக இசையமைத்து வந்த நிலையில், 1976ம் ஆண்டு சுரேந்திரா காலமானார்.

பின்பு நண்பனின் நினைவாக அதே பெயரில் படங்களுக்கு இசையமைத்தவர் தான் விஜய் பாட்டீல் (லக்ஷ்மண்). 

1989-ல் மைனே பியார் கியா பாடல்களின் மூலம் பெரிய புகழை அடைந்தார் ராம் லக்‌ஷ்மண். 1994-ல் இவர் இசையமைத்த ஹம் ஆப்கே ஹைன் கெளன் படம் பாடல்களுக்காகவே ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. இதனால் புகழின் உச்சத்தை எட்டினார் ராம் லக்‌ஷ்மண்.

இந்நிலையில் நாகபுரியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பால் ராம் லக்‌ஷ்மண் இறந்ததாக அவருடைய மகன் அமர் தெரிவித்துள்ளார்.

ராம் லக்‌ஷ்மணின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.