ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு

ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு

ஆப்பிள் நிறுவன சேவை ஒன்றில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு அந்நிறுவனம் பல லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு ஆப்பிள் ஆப்பிள் நிறுவனத்தின் "சைன்-இன் வித் ஆப்பிள்" எனும் சேவையில் ஜீரோ-டே எனும் பிழையை தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சமீபத்தில் கண்டறிந்து தெரிவித்தார். பாதுகாப்பு பிழையை கண்டறிந்து தெரிவித்த பொறியாளருக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பாதுகாப்பு பிழை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டிருக்காத ஆப்பிள் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை பாதிக்கிறது. ஹேக்கர்களின் முயற்சியில் இந்த பிழை மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள பயனர் அக்கவுண்ட் விவரங்களை முழுமையாக அம்பலப்படுத்திவிடும். சைன் இன் வித் ஆப்பிள் பவுக் ஜெயின் என்ற மென்பொறியாளர் ஆப்பிள் சேவையில் இருந்த பிழையை கண்டறிந்தார். மேலும் இந்த பிழை காரணமாக எந்த அக்கவுண்ட் விவரங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சைன் இன் வித் ஆப்பிள் சேவை ஆத் 2.0 போன்றே இயங்குவதாக அவர் தெரிவித்தார். ஹேக்கர்கள் ஆப்பிள் சர்வெர்களால் உருவாக்கப்பட்ட ரகசிய குறியீடுகளை எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும், மற்ற பயனர்களின் ஆப் அக்கவுண்ட் விவரங்களை இயக்கி விட முடியும். ஆப்பிள் நிறுவன மின்னஞ்சல் முகவரி கொண்டு குறியீடுகளை ஹேக்கர்கள் கோரினாலும், ஆப்பிள் அதனை பொது தளத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தது என ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு செய்யும் போது எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும் ஆப் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் நிலவியதாக அவர் தெரிவித்தார்.