ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை நாகினி டான்ஸ் ஆட வைத்த போலீஸார்! விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்

ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை நாகினி டான்ஸ் ஆட வைத்த போலீஸார்! விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்

ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றதாத இளைஞர்கள் இருவரை பிடித்த ராஜஸ்தான் காவல்துறையினர், அவர்களை நாகினி நடனம் ஆட வைத்துள்ளனர்.

தமிழகத்திலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு காவல்துறையினர் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

மன்னார்குடியில் ஊரடங்கு விதிகளை மீறிய பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் கொரோனா ஆபத்து குறித்து விளக்கம் கொடுத்து, அனுப்பி வைத்தார். நெல்லையில் ஊரடங்கு விதிகளை மீறிய இளைஞர்களை காவல்துறையினர் திருக்குறள் எழுத வைத்து அனுப்பினர். 

இந்நிலையில் தற்போது கொரோனா விதி முறைகளை மீறிய இளைஞர்களை நாகினி நடனம் ஆட வைத்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.