கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்: மே 9- 1502

கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்: மே 9- 1502

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர். * 1942 - இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள்

 

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர். * 1942 - இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய ராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க ராணுவத்தால் கைப்பற்றப்பட்டான். * 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நார்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நார்வேயில் கைது செய்யப்பட்டார். * 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் பிராக் நகரை அடைந்தன.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன. * 1955 - பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது. * 1956 - உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது. * 1980 - புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்தது. இதில் 35 பேர் கொல்லப்பட்டனர். * 1985 - காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

* 1987 - போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர். * 1988 - கன்பராவில் ஆஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. * 2002 - ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். * 2004 - செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.