ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

 

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கே எல் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக கெய்ல் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடினர். பஞ்சாப் 39  ரன்கள் எடுத்திருந்த போது அகர்வால் 22 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட இழந்தனர். கிறிஸ் கெய்ல் 15, பூரன் 0,  தீபக் ஹூடா 13, ஹென்ரிக்ஸ் 14,  ஆலன் 6, ரன்கள் எடுத்து வெளியேறினார்.

 

 

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.

 

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான், அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்தனர்.  20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டும் சித்தார்த் கவுல், ரஷித் கான், புவி 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.