சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

வடகிழக்கு சைபீரியாவில் லேனா ஆற்றின் அருகே செயல்பட்ட தங்கச் சுரங்க தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் பணியாற்றினர். 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்தும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி விபத்திலும் சிக்கினர். இதனால்

 

வடகிழக்கு சைபீரியாவில் லேனா ஆற்றின் அருகே செயல்பட்ட தங்கச் சுரங்க தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் பணியாற்றினர். 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்தும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி விபத்திலும் சிக்கினர்.

இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, அபராதம் விதிப்பதை ரத்து செய்தல், தரமான உணவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1912ம் ஆண்டு மார்ச் மாதம் போராட ஆரம்பித்தனர். இதன் உச்சகட்டமாக ஏப்ரல் மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

 


தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக இம்பீரியல் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏப்ரல் 17-ம் தேதி தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் கமிட்டியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மனு அளிப்பதற்காக தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தொழிலாளர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 150 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.