யாழில் மாயமாகிய இரண்டு வயது பெண் குழந்தை தொடர்பில் வெளியான செய்தி

யாழில் மாயமாகிய இரண்டு வயது பெண் குழந்தை தொடர்பில் வெளியான செய்தி

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குறித்த குழந்தையின் தந்தை நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 2 வயதுடைய ஆர்கலி என்ற குழந்தை தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குழந்தை உணவருந்திக்கொண்டு இருந்த போது குழந்தையை காணாமல் போயிருந்தது. எனினும் இந்த கடத்தலில் தந்தையின் தரப்பினர் தொடர்பு பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை தாயாருக்கு கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் குழந்தை தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியால் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.